தூத்துக்குடி அருகே உள்ள அந்தோணியார் புறத்தில் உள்ள புகழ்பெற்ற புனித சீயன்னா கத்தரீனம்மாள் ஆலயம் நூறாவது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது இதனை முன்னிட்டு நூறாவது ஆண்டு ஆலய திருவிழா கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது கொடியானது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆலயத்தின் முன்பு உள்ள கொடிமரத்தில் மந்திரித்து ஏற்றப்பட்டது கொடியை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் ரவிபாலன் ஏற்றி வைத்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய பங்குத்தந்தை ஸ்டீபன் மரிய தாஸ், ஊர் பெரியவர்கள் செய்தனர்