முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் மற்றும் நடிகர் கருணாஸ், சிவகங்கை அருகே பனங்காடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜெர்மனி, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.15,516 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டதையும், இதன் மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதை வரவேற்று, முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்தார்.