விருதுநகர் சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்து வந்த 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு திடீரென வேலை இல்லை என்ற அறிவிப்பையடுத்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பயனாளிகளுக்கு தொடர்ந்து வேலை தர வேண்டும் என்று வலியுறுத்தி சிஐடியு சார்பில் யூனியன் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்டச் செயலாளர் தேவா தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சிஐடியு நிர்வாகிகள் பயனாளிகள் கலந்து கொண்டனர்.