ஜார்கண்டிலிருந்து ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொண்டபோது பொது ஜன பட்டியில் 2டிராவல் பேக்குகளில் 20 கிலோ கஞ்சா கொண்டு வந்த திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த முரளி மற்றும் கர்நாடக பகுதியைச் சேர்ந்த நடராஜா, முருகேஷ் மற்றும் சத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த சம்பாசிவம் ஆகிய நான்கு பேரை கைது செய்து ஜோலார்பேட்டை மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.