தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் தனியார் அறக்கட்டளை சார்பில் பொதுமக்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்கார் அருள் முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது.