தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள ராஜூ நகர் பகுதியில் கிணற்றில் பூனைக்குட்டி கிடப்பதாக கோவில்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் கூடை மூலம் பூனையை பத்திரமாக மீட்டனர். கிணற்றில் மேலே வந்த உடனே பூனைக்குட்டி தாவி காட்டுப்பகுதிக்குள் சென்றது. பூனைக்குட்டியை மீட்ட தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.