ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா கலந்து கொண்டு முதலுதவி செய்வதன் அவசியம் குறித்து மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து எவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது