திருப்புல்லாணி, வளந்தர்வாய் பகுதியில் லிக்னைட் எடுப்புத் (Lignite Projects) திட்டத்திற்கான ஆய்வு நடைபெற்று வருவதால் நிலத்தடி நீர், விவசாயம் மற்றும் மக்களுடைய வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறும் சூழல் ஏற்படும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் லிக்னைட் இருப்பிற்கான தேடுதல் மற்றும் ஆய்வு செய்யும் பணியை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் என ஹைட்ரோ கார்பன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பை சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.