விருதுநகர் தெப்பம் மேற்கு பஜார் கோ ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழாவை மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கு ஏற்றி முதல் விற்பனை துவக்கி வைத்து இந்த வருடம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள புது புது ரகங்களை பார்வையிட்டார். விருதுநகரில் இந்த வருடம் தீபாவளி விற்பனை குறியீடு ரூ60லட்சம் ஆகும். மண்டல மேலாளர் விற்பனை நிலையம் மேலாளர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.