ஆடிவெள்ளியை முன்னிட்டு திரைப்பட பாடகர் வேல்முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம் செய்தார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பூஜை பொருட்களுடன் சென்ற பாடகர் வேல்முருகன் மூலவர் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தார்.