திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமில் 53 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பீம நகர் கணபதி நகரில் பகுதியில் பொதுமக்கள் சாலை வசதி செயற்படுத்த வேண்டும் மழை நீர் வடிகால் முறைப்படுத்த வேண்டும் என மனு அளித்திருந்தனர் இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அப்பகுதிக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தார்