தேசிய தர நிர்ணயக் குழுமம் (NAAC) ஜூன் மாதம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகைதந்து மதிப்பீடு செய்து, ஐந்தாண்டுகால (2019-2024) செயல்திறன்கனை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தறிந்து பல்கலைக்கழகத்திற்கு 3.58/4.0 மதிப்பெண்களுடன் கூடிய உச்சபட்சத் தரக் குறியீடான A++ தகுதியை வழங்கியுள்ளது.