பரமக்குடியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஸ்ரீ வாணி கருப்பண்ண சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது கும்பாபிஷேக விழாவையொட்டி சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் கொண்டு வந்து கும்பம் மற்றும் சுவாமி மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்று பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன்,வாணி கருப்பணசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது