2024-2025 கல்வி ஆண்டுக்கான தமிழகத்திற்கு தரவேண்டிய சமக்ரா சிக்சா' கல்வி நிதியான 2,152 கோடி நிதியை ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கை மற்றும் 'பி.எம்.,ஸ்ரீ' திட்டத்தினை தமிழக அரசு ஏற்காமல் இருப்பதால் அவை ஏற்றால் மட்டுமே அளிக்க முடியும் என பிடிவாதமாக நிதியை விடுவிக்காமல் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.அத்தகைய நிதியை விடுவிக்க கோரி திருவள்ளூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இரண்டாவது நாளாக திருவள்ளூரில் உள்ள தனது நாடாளுமன்ற அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார்,