நாட்றம்பள்ளி பேரூராட்சி மன்ற அலுவலக கூட்ட அரங்கில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சசிகலாசூரியகுமார் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட சேர்மன் சூரியகுமார் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் ,கவுன்சிலர்கள், அலுவலர்கள் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.