இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது. அதன்படி 2012 ல் இருந்து ஒவ்வொரு வருடமும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் அஞ்சல் ஊழியர்கள், விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் உத்தரவின் படி, தலைமை தபால் அதிகாரி உமா கொடியசைத்து சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.