முன்னாள் குடியரசு தலைவர் மறைந்த அப்துல் கலாம் பயின்ற மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தமிழகத்தில் முதலாம் இடமாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான பாராட்டுச்சான்று மற்றும் நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன தலைமையாசிரியரிடம் வழங்கி பாராட்டினார்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.