வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட ஆசிரியர்நகர் பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவன் புர்ஹான் என்பவரிடம் சில இளைஞர்கள் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி செல்போனை பறித்து சென்றுள்ளனர். மேலும் வீட்டில் நுழைந்து புர்ஹான் மற்றும் அவரது தாயை இரும்பு கம்பியால் 6பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். இது குறித்து நகர போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இளைஞர்களை தேடி வருகின்றனர். இது குறித்த வீடியோ இன்று இரவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.