இந்து முன்னணி அமைப்பின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 20 முக்கிய இடங்களில் அரசு விதிகளை பின்பற்றி பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடைபெற்றது. இதனை அடுத்து விநாயகர் சதுர்த்தி விழா முடிவடைந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி காஞ்சிபுரம் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் அமைக்கப்பட்ட 20 பிரம