தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீ நகர் காலனியில் நேற்று நள்ளிரவு 2 மணி அளவில் தாறுமாறாக ஓடிய கார் ஒன்று மின் கம்பத்தில் மோதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.