தமிழகத்தில் வருகின்ற 19ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பல வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் எந்தவித அச்சமும் இல்லாமல் வாக்கு சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்யும் வகையில், கோட்டகுப்பம் டி.எஸ்.பி தலைமையில் மரக்காணம் போலீஸ் மற்றும் துணைராணுவ படையினர் நேற்று மாலை கூனிமேடு பகுதியில் தேர்தல் விழிப்புணர்வு அணிவகுப்பு நடத்தினர்.