வாணியம்பாடி அடுத்த திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பள்ளி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் இன்று இரவு எஸ்பி சியாமளாதேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து திம்மாம்பேட்டை மற்றும் அம்பலூர் காவல் நிலையங்களை பார்வையிட்டு அங்கு பராமரிக்கப்படும் கோப்புகளை ஆய்வு செய்து மேலும் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் பற்றியும் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.