எரியோடு அய்யலூர் ரோடு பகுதியை சேர்ந்த கருப்பையா மகன் லோகேஸ்வரன் வயது 33. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் ராணுவ வீரராக பணிபுரிந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் பணியில் இருந்த பொழுது மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மூளைச்சாவு ஏற்பட்டு பின்னர் உயிர் பிரிந்தது. லோகேஸ்வரன் உடல் விமானம் மதுரை கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ரோடு வழியே எரியோடு கொண்டுவரப்பட்டது. அங்குள்ள எரிவாயு மயானத்தில்நல்லடக்கம் செய்யப்பட்டது.