திருப்பத்தூர் நகராட்சி தூய நெஞ்சக் கல்லூரி முன்பு இன்று மே தின பேரணி நடைபெற்றது. இதில் மலைவாழ் மக்கள் சங்க தலைவர் லட்சுமணராஜா கலந்து கொண்டு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி புதிய பேருந்து நிலையம் வழியாக சேலம் கூட்டு ரோடு வரை சென்றது. பின்னர் அங்கு மேதின பொதுக்கூட்டம் தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் ஜோதி தலைமையில் நடைபெற்றது.