பழனி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி 8 வது வார்டு பள்ளிவாசல் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முகமது கனி. இவர் தனது மனைவி, மகள் ,பேரன் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது மேற்கூரை திடிரென ஓடுகள் கீழே விழுந்ததை கண்டு வீட்டை விட்டு வெளியேற முயற்சி செய்துள்ளார். அப்போது குடும்பத்தினர் வெளியேறிய போது இவர் மீது வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இவருக்கு கால், கை, நெஞ்சு பகுதியில் மண் சரிந்து விழுந்ததில் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.