காரைக்குடியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 44 விநாயகர் சிலைகள் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.இன்று 100 அடி சாலையில் இருந்து பாஜக மூத்த நிர்வாகி எச்.ராஜா ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.ஊர்வலம் தொடங்கியவுடன் மழை பெய்யத் தொடங்கிய போதிலும், கொட்டும் மழையில் ஊர்வலம் நடைபெற்றது. இது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வ.உ.சி. ரோட்டில் உள்ள பருப்புபூரணியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு ஏ.எஸ்.பி. ஆஷிஸ்புனியா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவலர்க