பரமக்குடி ஆயிர வைசிய தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தினை பரமக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முருகேசன் தொடங்கி வைத்து தனது கையால் மாணவ, மாணவிகளுக்கு உணவினை பரிமாறினார். தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவினை சாப்பிட்டார். தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், நகரமன்ற உறுப்பினர்கள் பள்ளி மாணவ மாணவிகளுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவினை சாப்பிட்டனர்.