ராஜாக்கமங்கலம் அருகே பூவன் குடியிருப்பு பகுதியில் செம்பக்குளம் உள்ளது இந்த குளத்தில் நேற்று முன் தினம் தலை இல்லாத நிலையில் பச்சிளம் குழந்தை உடல் மீட்கப்பட்டது உடலை ஆசாரிப்பள்ளம்bமருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ராஜாக்கமங்கலம் போலீசார் அந்த பகுதியில் உள்ள வீடுகளில் விசாரணை நடத்தி வருகின்றனர் மேலும் சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது நரவலி கொடுக்கப்பட்டதா எனவும் விசாரணை நடந்து வருகிறது.