சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் 150-க்கும் மேற்பட்ட பிள்ளையார் சிலைகள் கடலை மாவு, காகித கூழ், இயற்கை வண்ணங்களால் அழகாக தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுகின்றன. மூஷிக, அஸ்வ, ரிஷப, கஜ வாகன விநாயகர்கள் உள்ளிட்டவை பக்தர்களை கவர்கின்றன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திலிருந்து பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.