இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது விருதுநகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர் பக்தர்கள் சார்பில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாரிகள் தொழிலாளர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.