திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தம்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த வீருசின்னம்மாள் கோவில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இரண்டு நாட்கள் நடந்த யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து புனித நீர் குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.