ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த கல்புதூர் கிராமத்தில் மின்சார பராமரிப்பு பணியில் குமரேசன் மற்றும் இரண்டு மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் இரண்டு பேர் காயம் அடைந்தனர் காயமடைந்த இருவரும் வாலாஜாபேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன