ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த காவனூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் .தொடர்ந்து திமிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டனர்