திருப்பூர் காவத்தம்பாளையம் பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் அப்பகுதியில் அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வந்த விவசாயிகள் இருவருக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் உண்ணாவிரதத்தை கைவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.