நாளை செப்டம்பர் 5ஆம் தேதி கேரளா மக்களின் பாரம்பரிய திருவிழாவான ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது இதையொட்டி தூத்துக்குடியில் உள்ள அமிர்தா வித்யாலயம் சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது இதை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் மாணவ மாணவிகள் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அத்தப்பூ கோலத்தை வரைந்து பின்னர் மகாபலி ராஜாவை வரவேற்கும் வகையில் வேடமனிந்த மாணவர்கள் ஓணம் கொண்டாட்டத்தை மாணவர்களுக்கு வெளிப்படுத்தினர்.