சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் லெட்சுமணன் நடத்தும் வின்டேஜ் கார், கேமரா மியூசியத்தில் பழமையான கார்கள், கேமராக்கள், டெலிபோன்கள், மாட்டு வண்டி உள்ளன. திருப்பத்தூர் கண்பார்வையற்ற மாணவர்கள் இங்கு வந்து பொருட்களைத் தொட்டு உணர்ந்து மகிழ்ந்தனர். மியூசிய நிர்வாகி அவற்றின் சிறப்புகளை விளக்கினார். மாணவர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்து நன்றி தெரிவித்தனர்.