சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் காளீஸ்வரன் (20) நேற்று வீட்டுவிழாவிற்கு மைக் செட் போடச் சென்றபோது, பைக்கில் வந்த கும்பல் ஒருசிலர் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரை – ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் மானாமதுரை அருகே வழிவிடு முருகன் கோவில் முன்பு மறியல் நடைபெற்றது