சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்துள்ள கோனேரிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி இவரது மனைவி காளிமுத்து (60). கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இரவு காளிமுத்து அம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார் அப்போது அவரது வீட்டில் புகுந்த ஒரு கும்பல் அவரை கொலை செய்து அவரிடம் இருந்த தங்க நகை மற்றும் செல்போன் ஆகியவைகளை கொள்ளையடித்துச் சென்றனர் .