சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் புதன்கிழமை மாலை 6 முதல் 7 மணி வரை மிதமான மழை பெய்தது. சிங்கம்புணரி நகர், அணைக்கரைப்பட்டி, மணப்பட்டி, என்பீல்டு, கிருங்காகோட்டை, ஓசாரிபட்டி, சிவபுரிபட்டி, பிரான்மலை பகுதிகளில் மழைநீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இம்மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. தொடர் மழையால் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.