தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மே 12ஆம் தேதி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு லட்சுமி நகர் பகுதியில் கிளை கழகங்கள் சார்பில் மாபெரும் கல்லி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கேசி வீரமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறிய குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ந்தார் அதன் பின்னர் கிரிக்கெட் விளையாடி அசத்தினார்.