ஆம்பூர் பெத்தலேகம் பகுதியில் உள்ள தனியார் மாவு அரவை மில்லில் சட்ட விரோதமாக அரைப்பதற்காக வைத்திருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை குற்ற பிரிவு காவல்துறையினர் இன்று மாலை பறிமுதல் செய்து குடிமைபொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.