திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கணேசபுரத்தில் உள்ள செல்வம் என்பவரது தோட்டத்தில் பெண் யானை திடீரென மயங்கி விழுந்தது. சிறப்பு கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.