நாகப்பட்டினம் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவ மாணவிகளுக்கு வேதாரண்யம் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “உயர்வுக்கு படி” மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (28.08.2025) தொடங்கி வைத்தார். இன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.