ஆண்டிபட்டி அருகே கண்டமனூரில் காவல் தெய்வமான கோட்டை கருப்பசாமி கோவில் வருசாபிஷே க நிகழ்ச்சி நடந்தது. ஒரு வார காலம் சுமங்கலி , கன்னிப் பெண்கள் விரதம் இருந்து மூல வழி ஆற்றில் பாலசுப்பிரமணியர் கோவிலில் இருந்து பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்து கருப்பசாமிக்கு பாலாபிஷேகம் நடந்தது மகா தீபாராதனை நடைபெற்றது 200க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்