பழனி கிராம பகுதி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் யுவராஜ் கிரிகெட் அகாடமி "பழனி பிரிமியர் லீக்" என்ற அமைப்பு உருவாக்கி சிறப்பு கிரிக்கெட் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 8 அணிகள் உருவாக்கப்பட்டு அதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி பழனியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடந்தது. இதில் பழனி டவுன் அடிவாரம், ஆயக்குடி, அமரபூண்டி, ஒட்டன்சத்திரம் என பல்வேறு பகுதியை சேர்ந்த அணிகள் தங்களுக்கான வீரர்களை தேர்வு செய்தனர்.