சாலவாக்கம் ஒன்றியத்துக்குட்பட்ட கலியப்பேட்டை, ஒரக்காடுபேட்டை, காவித்தண்டலம், திருவானைக்கோவில், மாம்பாக்கம், சிறுதாம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் இந்தியா கூட்டணி திமுக காஞ்சிபுரம் தனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. திமுக MLAவும் மாவட்ட செயலாளருமான க.சுந்தர், விசிக மாவட்ட செயலாளர் தி.வ.எழிலரசு, மேலிட பொறுப்பாளர் பாசறை செல்வராஜ், நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.