ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பேரூராட்சியின் முன்னாள் திமுக நகர அவைத் தலைவர் அண்ணாமலை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார் இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அம்மூர் பகுதிக்கு நேரில் சென்று மறைந்த திமுக நிர்வாகி அண்ணாமலையின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து அமைச்சர் காந்தி ஆறுதல் தெரிவித்தார்