ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் கணவன் மனைவி இருவர் அதே பகுதியில் உள்ள சுமார் 40 அடி ஆழம் கொண்ட தண்ணீர் இல்லாத கிணற்றில் இன்று காலை தவறி விழுந்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து வந்த ஆம்பூர் தீயணைப்பு துறையினர் தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த கணவன் மனைவி இருவரையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.