திருப்பத்தூர் அடுத்த ஜடையனூர் பகுதியில் சதீஷ்குமார் என்பவரை நாய் கடிக்க வந்ததாக கூறப்படுகிறது. அச்சமடைந்த சதீஷ்குமார் நாயை துரத்தி சென்றுள்ளார். அப்போது நாயின் உரிமையாளர்கள் இன்று இரவு சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் சதீஷ்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து குருசிலாப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.