நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிதீவிர ரோந்து படை வாகனங்களை எஸ்பி ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். மாவட்டத்தில் குற்றங்களை குறைக்கும் வகையில் முன்கூட்டிய சம்பவப் பகுதிக்கு சென்று குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அதன் அடிப்படையில் தற்போது அதி தீவிர விரைவு ரந்து படை வாகனம் துவக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்